Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
பூண்டு சட்னியை ஒருவாட்டி இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Gujarati Style Poondu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்னும் எந்த சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூண்டு நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த பூண்டு கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்யும் பூண்டு சட்னியை செய்யாமல், குஜராத்தி ஸ்டைல் பூண்டு சட்னியை செய்யுங்கள். இந்த பூண்டு சட்னி தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இதில் பூண்டு அதிகம் இருப்பதால், அதில் உள்ள சத்துக்களால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பேச்சுலர்கள் சட்டென்று செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு குஜராத்தி ஸ்டைல் பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குஜராத்தி ஸ்டைல் பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய பூண்டு - 4
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பூண்டு பற்களை எடுத்து, அவற்றை தோலோடு நன்கு தட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயத் தூள், சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூளை எடுத்து,
நீர் சேர்த்து கெட்டியாக இல்லாமல் சற்று நீர் போன்று கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதை வாணலியில் உள்ள பூண்டுடன் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் 3-4 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கிளறி, 2 நிமிடம்
கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான குஜராத்தி
ஸ்டைல் பூண்டு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
