Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வேர்க்கடலையும், எள்ளும் இருந்தா போதும்.. இட்லிக்கு அட்டகாசமான சட்னியை செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Groundnut Sesame Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசிப்பதே பெரிய வேலையாக உள்ளதா? உங்களின் சுமையைக் குறைக்க உங்களுக்காக ஒரு அட்டகாசமான சட்னி ரெசிபியைத் தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த சட்னிக்கு வேர்க்கடலையும், எள்ளும் வேண்டும். இந்த இரண்டு பொருட்களுமே அட்டகாசமான சுவையைக் கொண்டவை. இவ்விரண்டைக் கொண்டும் சட்னி தயாரிக்கும் போது வீடே மணக்கும். அதுவும் இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட்டால், எத்தனை இட்லி, தோசை சாப்பிடுகிறோம் என்ற கணக்கே தெரியாது. அந்த அளவில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை எள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை எள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 7
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* எள்ளு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பூண்டு, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின்பு வேர்க்கடலையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து எள்ளு, கொத்தமல்லி, புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை எள்ளு சட்னி
தயார்.
Image Courtesy: I camp in my kitchen



Click it and Unblock the Notifications
