Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
3/4 கப் பச்சைப்பயறும் 1/4 கப் உளுத்தம் பருப்பும் இருந்தா இப்படி ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்...
Green Gram Paniyaram Recipe In Tamil: காலையில எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமாக அதே சமயம் சத்தான ஒரு காலை உணவைசெய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சைப்பயறும், உளுத்தம் பருப்பும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பணியாரத்தை செய்யுங்கள். இந்த பச்சைப்பயறு பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். முக்கியமாக இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு பச்சைப்பயறு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சைப்பயறு பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 3/4 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
* தேங்காய் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில்
ஒன்றாக எடுத்து அவற்றை நீரில் 2 முறை அலசி விட வேண்டும்.
* பின் அதில் சுடுநீரை ஊற்றி மூடி வைத்து, 2-3 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 2-3 மணிநேரம் ஆனதும், ஊற வைத்துள்ள பச்சைப்பயறு மற்றும் உளுத்தம்
பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு,
இஞ்சி சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால் நீர் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் நீர் அதிகம்
சேர்க்க வேண்டாம். இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் சீரகம்,
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய், ஸ்வீட் கார்ன்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், மாவை குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக
வைத்து எடுத்தால், சுவையான பச்சைப்பயறு பணியாரம் தயார்.
Image Courtesy: My Magic Pan



Click it and Unblock the Notifications
