Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
பச்சை பயறை இதுவரை கடைஞ்சு சாப்பிட்டிருப்பீங்க.. அடுத்தமுறை குழம்பு செய்யுங்க.. சூப்பரா இருக்கும்..
Green Gram Kuzhambu Recipe In Tamil: வாரம் ஒருமுறை பச்சை பயறை உணவில் சேர்த்து வருவது உடலுக்கு நல்லது. ஏனெனில் பச்சை பயறில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதுவரை நீங்கள் பச்சை பயறை கடைந்து தான் சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அடுத்தமுறை அந்த பச்சை பயறைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சை பயறை ஒரு வாணலியில் போட்டு மணம் வரும் வரை வறுத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த பச்சை பயறை குக்கரில் போட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்
மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான
அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து
10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
பச்சை பயறு குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
