Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
தக்காளி சட்னியுடன் இந்த 2 பொருளை சேர்த்து செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Green Chilli Tomato Chutney Recipe In Tamil: இன்று காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் தக்காளி சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இட்லிக்கு இன்று தக்காளி சட்னி செய்யும் போது, வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமான சுவையில் ட்ரை செய்யுங்கள்.
அதாவது வழக்கமாக தக்காளி சட்னிக்கு வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்ப்பீர்கள். ஆனால் அதற்கு பதிலாக பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து செய்தால் சுவை இன்னும் வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பச்சை மிளகாய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மிளகாய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி - 1 இன்ச்
* வெங்காயம் - 3
* தக்காளி - 3
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் பச்சை மிளகாயையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்
இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, பச்சை மிளகாய்
வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, சட்னிக்கு தேவையான அளவு உப்பை தூவி,
தக்காளி ஓரளவு வதங்கும் வரை ஒரு 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து மென்மையாக
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான பச்சை மிளகாய் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: PMC Daily



Click it and Unblock the Notifications
