Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி கூறிய க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்யணும் தெரியுமா?
Green Chicken 65 Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் தவறாமல் சிக்கன் வாங்கி 65 செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் சிக்கன் 65 செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் 65 செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி கூறிய க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை உங்கள் வீட்டில் ட்ரை செய்யுங்கள். இந்த க்ரீன் சிக்கன் 65 செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* பூண்டு - 5 பல்
* புதினா - சிறிது
* சிக்கன் - 250 கிராம்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நீரில் நன்கு கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி,
பூண்டு, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து, அதில் மல்லித் தூள்,
கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத் தூள், தயிர், அரிசி மாவு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிசைந்து, 2 மணிநேரம் மூடி வைத்து
ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை
சேர்த்து, அத்துடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனை பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான க்ரீன் சிக்கன் 65 தயார்.



Click it and Unblock the Notifications