Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
1 குடைமிளகாய் இருந்தா போதும்... சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் செய்யலாம்... எப்படின்னு பாருங்க..
Green Capsicum Gravy For Chapati In Tamil: நைட் வீட்டிற்கு வர லேட்டாகிவிட்டதா? சப்பாத்திக்கு சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யுங்கள். இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 1 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 1 (சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லி தூள - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிப்பில்லாத தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை
சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில், சீரகம், பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும் .
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும். தக்காளி வதங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை
வைத்து, அதில் கடலை மாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளி வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்
மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை
போக வதக்கி, பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, அத்துடன் கடலை மாவையும்
சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கெட்டியாகி நன்கு
எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை
சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி கிளறி
இறக்கினால், சுவையான குடைமிளகாய் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications