Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம்...
Gothumai Maavu Thattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? ஆனால் வீட்டில் எந்த ஸ்நாக்ஸும் இல்லையா? வீட்டில் கோதுமை மாவு உள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு 10 நிமிடத்தில் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் தட்டை. இந்த தட்டையை நீங்கள் இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதை வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு கொண்டு செய்யலாம்.

உங்களுக்கு கோதுமை மாவு தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, தனி மிளகாய் தூள், சீரகத் தூள்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 1/2 டீஸ்பூன் ஓமத்தை கையில் எடுத்து அதை நசுக்கி, மாவுடன்
சேர்க்க வேண்டும். அதேப் போல் கசூரி மெத்தியையும் நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* பிறகு அந்த மாவை கையால் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைய வேண்டும். பின்
தேவையான அளவு நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை மூன்று உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, கோதுமை மாவில் பிரட்டி, பின் அதை
சப்பாத்தி போன்று சற்று மெலிசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கூர்மையான முனையைக் கொண்ட டப்பா அல்லது டம்ளரை எடுத்து,
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி மாவின் மேல் அச்சு வைத்து குட்டி குட்டி
சப்பாத்திகளாக வெட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள குட்டி
சப்பாத்திகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான
கோதுமை தட்டை தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications
