Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Gongura Egg Gravy Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா முட்டை மசாலாவை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக இருக்கும். மேலும் இந்த முட்டை மசாலாவை செய்வது மிகவும் சுலபம்.

இந்த கோங்குரா முட்டை கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த முட்டை மசாலா வழக்கமான முட்டைக்குழம்பு போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த முட்டைக் குழம்பு ஆந்திராவில் மிகவும் பிரபலமானதாகும். ஒருமுறை இந்த முட்டை மசாலாவை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள்.
உங்களுக்கு கோங்குரா முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோங்குரா முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கோங்குரா (புளிச்சக்கீரை) - 200 கிராம்
- வேகவைத்த முட்டைகள் - 6
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 6
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 4
- பட்டை - 1 இன்ச்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- தண்ணீர் - 1 கப்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பின்னர் நன்கு கழுவிய புளிச்சக்கீரை இலைகளைச் சேர்த்து, அவை முழுமையாகச் சுருங்கும் வரை வதக்கவும்.
- இதை ஆறவைத்து, கரகரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- முட்டைகளை வேகவைத்து உரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகவும், கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து, 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள கோங்குரா விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- கலவை கெட்டியாகும் வரை அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான கோங்குரா முட்டை கிரேவி ரெடி!



Click it and Unblock the Notifications
