Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மொறுமொறுப்பான... கோபி 65
மாலை வேளையில் போண்டா, பஜ்ஜி, வடை என்று செய்வதற்கு பதிலாக, வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய 65 செய்யலாம். இந்த கோபி 65 செய்வது மிகவும் சுலபம்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாக ஏதாவது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். பலருக்கும் இம்மாதிரியான எண்ணம் எழும். அப்போது போண்டா, பஜ்ஜி, வடை என்று செய்வதற்கு பதிலாக, வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய 65 செய்யலாம். இந்த கோபி 65 செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யலாம்.

உங்களுக்கு கோபி 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோபி 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காபிஃப்ளவர் - 1 (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
மாவிற்கு...
* மைதா - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* சோள மாவு - 1/8 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/8 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து, பின் நீரை முற்றிலும் வடிகட்டி விட வேண்டும்.
* பின்னர் ஒரு பெரிய பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் காலிஃப்ளவரை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் உதிர்த்துவிட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கோபி 65 தயார்.
குறிப்பு:
* காலிஃப்ளவரை எண்ணெயில் பொரிக்கும் போது, எண்ணெயை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் காலிஃப்ளவர் அதிக எண்ணெயை உறிஞ்சும்.
* காலிஃப்ளவருக்கு தயாரிக்கும் 65 மாவு அதிக நீராகவோ, அதிக கெட்டியாகவோ இல்லாமல், மிதமான பதத்தில் இருந்தால் தான், மாவு காலிஃப்ளவரில் ஒட்டும்.
* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக, காஷ்மீரி மிளகாய் தூளைப் பயன்படுத்தினால் நல்ல சிவப்பு நிறத்தில் கோபி 65 இருக்கும்.
* பேக்கிங் சோடா சிறிது சேர்த்தால், கோபி 65 கடினமாக இல்லாமல் மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஊற வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
* விருப்பமுள்ளவர்கள், மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications