Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
இஞ்சி குழம்பு
இஞ்சியைக் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இஞ்சி குழம்பு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இஞ்சி குழம்பு சாப்பிடுவது நல்லது.
இஞ்சி மருத்துவ குணம் நிறைந்தது. இஞ்சியை பொதுவாக சமையலில் அளவாக சேர்ப்போம். ஆனால் அந்த இஞ்சியைக் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இஞ்சி குழம்பு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இஞ்சி குழம்பு சாப்பிடுவது நல்லது. உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், அவ்வப்போது இஞ்சி குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு இஞ்சி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பன்
* வரமிளகாய் - 4-
* கறிவேப்பிலை - 1 கையளவு
* இஞ்சி - 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை பிசைந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றா சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்
* அதன் பின் அரைத்த மசாலாவை ஊற்றி, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* பிறகு புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், இஞ்சி குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

