Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா?
இஞ்சியோட பூண்டு சேர்த்து இப்படி சட்னி அரைச்சா எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது... ட்ரை பண்ணி பாருங்க...!
Ginger Chutney Recipe in Tamil: இந்திய உணவுகளில் சட்னி வகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் டிபன் வகைகளுக்கு சாம்பாரை விட சட்னிதான் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். சட்னிகள் சுவையாக இருக்கும் அதேவேளையில் அவற்றை ஆரோக்கியமானதாக அரைப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றதாகும்.

இஞ்சி பல நூற்றாண்டுகளாக இந்திய உணவுகளிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இஞ்சியில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இஞ்சி செரிமானத்தை ஊக்குவிக்கும், அதனால்தான் உணவுகளில் இஞ்சி அடிக்கடி சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியை வைத்தே சட்னி அரைப்பது சுவையுடன், ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும். இந்த பதிவில் வித்தியாசமான இஞ்சி சட்னியை எப்படி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- தோல் சீவி நறுக்கிய இஞ்சி - 2 துண்டு
- காஷ்மீர் மிளகாய் - 5
- வர மிளகாய் - 2
- பூண்டு - 5 பல்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
- புளிச்சாறு - 2 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- புளியை 10 நிமிடம் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து தனியாக
வைத்துக்கொள்ளவும்.
- இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி மற்றும்
பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு வதங்கியதும் அவற்றை வேறு தட்டுக்கு மாற்றி
வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 1 ஸ்பூன்
கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இப்போது அதில் மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிரும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் அவற்றை மிக்சி ஜாருக்கு மாற்றி அதனுடன் புளி மற்றும்
வெல்லம் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
- இப்போது அதை தனியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
- இப்போது கடாயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து
தாளித்து அதனை சட்னி மீது ஊற்றவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் சூப்பரான, ஆரோக்கியான இஞ்சி
சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications
