Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க..
இட்லிக்கு ஒருமுறை தக்காளி சட்னியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படி தான் எப்பவும் செய்வீங்க...
Garlic Tomato Chutney Recipe In Tamil: வீட்டில் பெரும்பாலும் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இந்த இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு புளிப்பான தக்காளி சட்னியைத் தான் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்களா? இதனால் நீங்கள் வீட்டில் தக்காளி சட்னியை அடிக்கடி செய்வீர்களா? எப்பவும் ஒரே மாதிரி தக்காளி சட்னியை செய்யாமல் அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்யுங்கள்.
ஆம், தக்காளி சட்னியையே பலவிதத்தில் செய்யலாம். அதில் ஒருவிதமான பூண்டு தக்காளி சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சட்னிக்கு வெங்காயம் எதுவும் தேவையில்லை. பூண்டும், தக்காளியும் இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த சட்னி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 7 பல்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 4
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 6-7 பூண்டு பற்கள், புளி ஒரு சிறிய
நெல்லிக்காய் அளவு மற்றும் 4 மீடியம் அளவு தக்காளியை நறுக்கி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர்
ஊற்றாமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காய
தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை
வேக வைத்து இறக்கினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: FullScoops



Click it and Unblock the Notifications
