Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
1 கையளவு பூண்டும், 1/2 கப் தயிரும் வெச்சு.. சட்டுன்னு இந்த சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்..
Poondu Thayir Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அப்படி செய்யும் இட்லி, தோசைக்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ்ஷை முடிவு செய்வது பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சிம்பிளான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் உங்கள் வீட்டில் பூண்டும், தயிரும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். அதோடு இந்த சட்னி சத்தானதும் கூட. கொலஸ்ட்ரால், பிபி போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது. இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தயிர் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 1 கையளவு
* தயிர் - 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கைப்பிடி பூண்டு பற்களை சேர்த்து
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தயிரை எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் மல்லித் தூள், 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மசாலாவின் பச்சை வாசனை போக குறைவான
தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கிளறி, அத்துடன்
1/2 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு தயிர் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
