Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிள்ளையார்பட்டி மோதகம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Ganesh Chaturthi Special Pillayarpatti Mothagam Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரப்போகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, விநாயகரை வழிபடுவது வழக்கம். விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, லட்டு போன்ற பலகாரங்கள் ரொம்ப பிடிக்கும்.
எனவே இந்த பலகாரங்களை பலவிதங்களில் மக்கள் செய்து விநாயகருக்கு படைத்து வழிபடுவார்கள். அதுவும் கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டால், அதில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் கொழுக்கட்டையை அனைவருக்கும் செய்ய தெரியலாம். ஆனால் மோதகத்தை எப்படி செய்வதென்று சிலருக்கு தெரியாது.

சொல்லப்போனால் கொழுக்கட்டையை விட மோதகம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஒரு சூப்பரான பிள்ளையார்பட்டி மோதகத்தை செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மோதகம் செய்யுங்கள். இப்படி செய்தால் 1/2 மணிநேரத்தில் அருமையான மோதகம் தயாராகிவிடும்.
உங்களுக்கு பிள்ளையார்பட்டி மோதகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிள்ளையார்பட்டி மோதகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 2 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, ஒரு துணியில்
போட்டு ஒரு 1/2 மணிநேரம் உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் உலர்த்திய அரிசியை சேர்த்து, சற்று பொரியும் வரை
நன்கு வறுத்து இறக்கி, அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, வெல்லத்தை கரைத்து எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் அரிசியை
சேர்த்து, ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும்,
அரைத்த அரிசி பருப்பு பொடியை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, அத்துடன் 1 சிட்டிகை
உப்பு சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால்
அடிபிடித்துவிடும்.
* நீர் ஓரளவு வற்றி கெட்டியாகத் தொடங்கியதும், அதில் துருவிய தேங்காயை
சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை
கற்பூரத்தை தூளாக்கி சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் மூடி வைத்து 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மாவின் பக்குவம் என்றால், கையில் நீரை தொட்டு விட்டு மாவை
எடுத்தால், மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த
பக்குவத்திற்கு மாவு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 2
டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு, கை பொறுக்கும் சூட்டிக்கு
வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மோதகம் அச்சை எடுத்து, அதில் நெய் தடவி, மாவை உள்ளே வைத்து,
மோதகம் போன்ற வடிவில் செய்து எடுத்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் மோதகங்களாக செய்து இட்லி தட்டில் வைக்க
வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து மூடி, 7
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பிள்ளையார்பட்டி மோதகம்
தயார்.
குறிப்பு: சூடாக இருக்கும் போது மோதகத்தை எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் உடைந்துவிடும். ஏனெனில் மாவு அவ்வளவு மென்மையாக இருக்கும். எனவே சற்று குளிர்ந்த பின் மோதங்களை இட்லி தட்டில் இருந்து எடுங்கள்.



Click it and Unblock the Notifications