Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
விநாயகர் சதுர்த்திக்கு ஒருமுறை கொழுக்கட்டை பாயாசம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Ganesh Chaturthi Special Kozhukattai Payasam: விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் வீட்டில் சற்று ஸ்பெஷலாக விநாயகருக்கு பிடித்த ஒரு ரெசிபியை செய்து படைத்து வணங்க விரும்புகிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் கொழுக்கட்டைக்கு பதிலாக, கொழுக்கட்டை பாயாசம் செய்யுங்கள்.
இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த ரெசிபியை செய்தால், பாயாசம் மற்றும் கொழுக்கட்டையை தனித்தனியாக செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

உங்களுக்கு கொழுக்கட்டை பாயாசம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொழுக்கட்டை பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* பச்சரிசி மாவு - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
பாயாசத்திற்கு...
* பாசிப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் - 1/2 மூடி
* ஏலக்காய் - 3
* வெல்லம் - 1 3/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்
கொழுக்கட்டை வேக வைப்பதற்கு..
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* நெய் - 2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க
வைத்து இறக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து, அத்துடன் 2 சிட்டிகை
உப்பு மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, சுடுநீரை
முழுவதுமாக ஊற்றி, ஸ்பூன் கொண்டு கிளறி விட்டு, 10 நிமிடம் மூடி வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மாவை கைகளால் நன்கு மென்மையாக
பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு நீரில் 2 முறை கழுவி,
பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் ஏலக்காய் மற்றும் 1/2 மூடி தேங்காயை
துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து,
அதை வடிகட்டி தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அத்துடன் 3/4 கப்
நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை
சேர்த்து உடனே கிளறி விடாமல், தானாவே மேலே மிதக்கும் வரை நன்கு 10
நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து
கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி கிளறி நன்கு 10 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு சிறு வாணலியை
வைத்து, அதில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து
பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை அப்படியே மற்றொரு அடுப்பில்
கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கிளறி, 10 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடம் கழித்து,
அரைத்து வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கிளறினால், சுவையான
கொழுக்கட்டை பாயாசம் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
