Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் ராஜ்மா தால் மக்னி
உங்கள் வீட்டில் உள்ளோர் வட இந்திய ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களா? உங்களுக்கு வட இந்திய ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்க்க ஆசையா? அப்படியானால் வீட்டில் ராஜ்மா உள்ளதா? அந்த ராஜ்மாவைக் கொண்டு ஒரு அட்டகாசமான தால் மக்னி செய்யுங்கள். இந்த ராஜ்மா தால் மக்னி சப்பாத்தி, பூரி, ரொட்டி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
முக்கியமாக ராஜ்மா தால் மக்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதுவும் ராஜ்மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ராஜ்மா தால் மக்னியை சமைத்த அன்றே சாப்பிடுவதை விட, மறுநாள் சாப்பிட்டால் தான் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ராஜ்மா தால் மக்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல் ராஜ்மா தால் மக்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* ராஜ்மா - 1 கப்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (அரைத்தது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கருப்பு ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* மில்க் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ராஜ்மாவை நீரில் 9 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை
குக்கரில் போட்டு, 2-3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெய் சேர்த்து உருக
வைக்க வேண்டும்.
* வெண்ணெய் உருகியதும், சீரகம், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி, அரைத்து
வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளற வேண்டும்.
* பிறகு பச்சை மிளகாயை சேர்த்து கிளறி, சீரகத் தூள் சேர்த்து தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்து
விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மில்க் க்ரீமை சேர்த்து கிளறி,
சிறிது வெண்ணெயை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான ராஜ்மா தால் மக்னி தயார்.
Image Courtesy: jeyashriskitchen



Click it and Unblock the Notifications