Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு ஒரு கொங்குநாடு ரெசிபியை இன்று செய்யுங்கள். அது தான் சிக்கன் சிந்தாமணி. இது ஒரு அற்புதமான சைடு டிஷ்.
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு ஒரு கொங்குநாடு ரெசிபியை இன்று செய்யுங்கள். அது தான் சிக்கன் சிந்தாமணி. இது ஒரு அற்புதமான சைடு டிஷ். இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு ஈரோடு சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு சிக்கன் சிந்தாமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 12
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, 1/4 கப் நீரை ஊற்றி, வாணலியை மூடி 30 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காயைத் தூவி நன்கு கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஈரோடு சிக்கன் சிந்தாமணி தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications
