Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
இறாலையும், முட்டையையும் வெச்சு இப்படி மசாலா செஞ்சு சாப்பிடுங்க.. சும்மா டக்கரா இருக்கும்...
Eral Muttai Masala Recipe In Tamil: நீங்கள் இறால் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் இறால் வாங்கி சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு ப்ரை, கிரேவி என்று செய்திருப்பீர்கள். எப்போதும் இறாலை இவ்வாறு சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமாக இறாலை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் இறால் முட்டை மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் முட்டை மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

முக்கியமாக இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு இறால் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* இறால் - 250 கிராம்
* முட்டை - 3
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, சீரகம், சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வதக்கி,
பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்
தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேரும்
வரை கிளறிவிட்டு, மூடி வைத்து 2 நிமிடம் இறாலை வேக வைக்க
வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கிளறி, இறாலை வாணலியில் ஒரு
பக்கமாக கொண்டு வந்து, மறுபக்கத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு
சேர்த்து சிறிது கிளறி விட வேண்டும்.
* முட்டை நன்கு வெந்து உதிர்ந்ததும், இறாலுடன் முட்டையை ஒன்று சேர
நன்கு கிளறி ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி, கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான இறால் முட்டை மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
