Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப நைட் இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க...
Egg Rice Recipe In Tamil: நைட் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மதியம் மீந்து போன சாதம் நிறைய இருக்கா? வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தை வெச்சு முட்டை ரைஸ் செஞ்சு சாப்பிடுங்கள். அதுவும் இந்த முட்டை ரைஸ் கடைகளில் விற்கப்படும் முட்டை ரைஸ் போன்று இருக்காது.
மாறாக, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதால் சற்று வித்தியாசமான சுவையுடன் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த முட்டை ரைஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு இருக்கும். அதோடு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 2 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மிளகாய் தூள், கரம்
மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் முட்டையை சேர்த்து நன்கு கிளறி, சாதத்தை சேர்த்து
நன்கு கிளறி இறக்கினால், சுவையான முட்டை ரைஸ் தயார்.
Image Courtesy: Pinterest



Click it and Unblock the Notifications
