Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
3 முட்டையும், 4 வெங்காயமும் இருந்தா இப்படி ட்ரை பண்ணுங்க.. ஒரு டைம் செஞ்சா அடிக்கடி செய்வீங்க..
Egg Omelette Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அடிக்கடி சிம்பிளான அதே சமயம் அனைத்து சத்துக்களும் கிடைக்கும் அளவிலான ரெசிபிக்களை தான் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் அடிக்கடி முட்டை ஆம்லெட்டை செய்து சாப்பிடுவீர்களா?
அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று முட்டை ஆம்லெட்டை செய்து சாப்பிடாமல், அடுத்தமுறை இந்த ஸ்டைலில் செய்து சாப்பிடுங்கள். இதனால் இனிமேல் இப்படி தான் எப்போதும் ஆம்லெட்டை செய்வீர்கள். மேலும் இப்படியான ஆம்லெட் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 4
* முட்டை - 3
* கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எள்ளு - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் கோதுமை மாவு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு ஒன்று
சேரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி, பின் அடித்து வைத்துள்ள கலவையை ஊற்றி பரப்பி விட்டு, சுற்றி
எண்ணெய் ஊற்றி, மேலே சிறிது எள்ளு விதைகளைத் தூவி, சிறிது நேரம் வேக
வைக்க வேண்டும்.
* பின் திருப்பிப் போட்டு சிறிது நேரம் மூடி வேக வைத்து எடுத்தால்,
சுவையான முட்டை ஆம்லெட் தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications
