Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
முட்டையைக் கொண்டு இப்படி ஒருமுறை செய்யுங்க.. முட்டை சாப்பிடாதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Egg Manchurian Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் இரவு நேரத்தில் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் முட்டை சாப்பிட மறுப்பார்களா? அப்படியானால் அவர்களுக்கு முட்டையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் மஞ்சூரியனை செய்யுங்கள். இந்த முட்டை மஞ்சூரியன் ஒரு சிறந்த மாலை நேர ஸ்நாக்ஸாக இருப்பதோடு மட்டுமின்றி, ஒரு நல்ல இரவு நேர உணவாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு முட்டை மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* வெங்காயம் - பாதி
* குடைமிளகாய் - பாதி
* ரெட் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் கரைத்துக் கொள்ளவும்.)
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
வேக வைப்பதற்கு...
* முட்டை - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
ப்ரை செய்வதற்கு...
* மைதா - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மிளகுத்
தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் இந்த முட்டை கலவையை ஊற்ற
வேண்டும். பின் அலுமினியத் தாள் கொண்டு காற்றுப்புகாதவாறு மூடிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, ஒரு
ஸ்டாண்ட்டை வைத்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அலுமினியத் தாள் கொண்டு மூடிய கிண்ணத்தை
வைத்து, 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கி குளிர
வைத்து, சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் மைதா, சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய் தூள்,
இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கட்டிகளின்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முட்டை துண்டுகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த முட்டைத் துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம்,
குடைமிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சில்லி சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து 2
நிமிடம் கிளறி, பின் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக முட்டைத் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, சிறிது மிளகுத்
தூளைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: Fusion Food Factory



Click it and Unblock the Notifications











