Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முட்டை மலாய் மசாலா
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான முட்டை மலாய் மசாலா செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, புல்கா, நாண் என்று எதையாவது செய்து சாப்பிடலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான மசாலா செய்யுங்கள். அதுவும் வித்தியாசமான முட்டை மசாலா செய்ய நினைத்தால், முட்டை மலாய் மசாலா செய்யுங்கள். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை மலாய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மலாய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 4
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
* பால் - 1 1/2 கப்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 2
மசாலா பொடிகள்...
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* பின் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றம் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் வெங்காய விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பாலை ஊற்றி, வேண்டுமானால் சிறிது நீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, மேலே மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, மூடியைத் திறந்து கிளறினால், சுவையான முட்டை மலாய் மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications