Latest Updates
-
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
5 முட்டை இருந்தா.. ஈவ்னிங் பசியுடன் இருக்கும் பசங்களுக்கு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு கொடுங்க..
Egg Lollipop Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் பசங்களுக்கு அவர்களின் பசியை போக்கும் வகையில் ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு லாலிபாப் செய்யுங்கள். இந்த முட்டை லாலிபாப் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இந்த மழைக்காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை லாலிபாப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை லாலிபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* முட்டை - 5-6
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
லாலி பாப் செய்வதற்கு...
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* பிரட் தூள் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை போட்டு, அதில் நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் வேக
வைத்து இறக்கி, குளிர வைத்து, அதன் ஓட்டை நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் வேக வைத்த முட்டைகளை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டை, பொடியாக நறுக்கிய
வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் மைதா மாவை சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்து, நீர் ஊற்றி
கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள ண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு உருட்டியதை சோள மாவு கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில்
போட்டு நன்கு பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்
போல் அனைத்து உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின்னர் அந்த உருண்டையின் மேல் ஒரு டூத்பிக் குச்சியை சொருகினால்,
சுவையான முட்டை லாலிபாப் தயார்.
Image Courtesy: Toasted



Click it and Unblock the Notifications
