Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
முட்டை கொத்து பாஸ்தா
உங்கள் வீட்டில் பாஸ்தா மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான மற்றும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை செய்யுங்கள். அதுதான் முட்டை கொத்து பாஸ்தா. இது ஒரு அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸ்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான மற்றும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை செய்து கொடுங்கள். அதன் பெயர் தான் முட்டை கொத்து பாஸ்தா. அதை செய்வது மிகவும் ஈஸி. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை கொத்து பாஸ்தா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கொத்து பாஸ்தாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 1 கப்
* முட்டை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* முட்டையில் உள்ள நீர் ஓரளவு வற்ற ஆரம்பிக்கும் போது, அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை கொத்து பாஸ்தா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications