Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
அடுத்தமுறை முட்டையை இந்த மாதிரி சுக்கா செஞ்சு சாப்பிடுங்க.. செம சூப்பரா இருக்கும்...
Egg Chukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் முட்டையை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டையை சாப்பிடுவீர்களா? அப்படியே முட்டையை சமைத்தாலும், ஆம்லெட், பொடிமாஸ் என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? இப்படி ஒரே மாதிரி முட்டை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் அடுத்தமுறை முட்டையைக் கொண்டு சுக்கா செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை சுக்கா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு சப்பாத்தியுடனும் சாப்பிலாம். இந்த முட்டை சுக்காவை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு முட்டை சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை வேக வைப்பதற்கு...
* முட்டை - 5
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
சுக்காவிற்கு...
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, மிளகுத் தூள், கரம் மசாலா, கடலை
மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் அடித்து வைத்துள்ள
முட்டை கலவையை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 20 நிமிடம் நன்கு
வேக வைத்து எடுத்து, குளிர்ந்த பின் கத்தியால் துண்டுகளாக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி 2
நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட முட்டைகளை சேர்த்து, மசாலா
முட்டையுடன் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூள்
மற்றும் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான
முட்டை சுக்கா தயார்.
Image Courtesy: timetocookasmr



Click it and Unblock the Notifications











