Just In
- 15 min ago
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை படிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
- 58 min ago
என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...
- 3 hrs ago
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- 3 hrs ago
அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
Don't Miss
- News
தமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்!
- Movies
சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு!
- Sports
இந்த நாலு போட்டோவை பாருங்க.. இப்போ சொல்லுங்க யார் மேலே தப்புன்னு.. பழிபோடும் ரூட்.. கோலி பதிலடி
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது
- Finance
இன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது காலாண்டு ஜிடிபி.. எப்படி இருக்கும்?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்பிளான... சிக்கன் கிரேவி
உங்களுக்கு திடீரென்று சிக்கன் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? சாதம் மற்றும் சப்பாத்திக்கு பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும் சிக்கன் ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கிரேவி செய்யுங்கள். அதுவும் தேங்காய் அரைத்து ஊற்றாத சிக்கன் கிரேவியை செய்யுங்கள். உங்களுக்கு மிகவும் சிம்பிளான, அதே சமயம் ருசியான சிக்கன் கிரேவி செய்ய வேண்டுமா?
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இது சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, தோசை என்று அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் அதன் செய்முறையைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 150 கிராம்
* பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பற்கள்
* இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* கல்பாசி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும். இறுதியாக கழுவும் போது, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கழுவ வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை குறைவான தீயில் 5 நிமிடம் வதக்க வேண்டும். இப்போது சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் 3/4-1 கப் வரை நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions