Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
அடுத்தமுறை சிக்கனை இப்படி வறுவல் செய்யுங்க.. சும்மா அள்ளும்...
Chicken Roast Recipe In Tamil: இன்று விடுமுறை என்பதால் பலரது வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிடுவோம். நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புதிய ரெசிபியை ட்ரை செய்வீர்களா?
இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு சிம்பிளான வறுவலை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் வறுவல் பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் வறுவலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 5
* வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சிக்கன் - 3/4 கிலோ
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்க
வேண்டும். அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்
ஆகியவற்றை சேர்த்து நன்கு சில நொடிகள் கிளறி விட வேண்டும்.
* பின் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில்
வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து சிக்கனை நன்கு கிளறி, மீண்டும்
10 நிமிடம் வேக வைத்து, நெய் ஊற்றி கொத்தமல்லியை தூவி கிளறி
இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
