Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
தீபாவளி ஸ்பெஷல் வாணியம்பாடி மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Diwali Special Vaniyambadi Mutton Biryani Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ பிரியாணியை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு ஸ்பெஷலான பிரியாணி செய்ய நினைத்தால், வாணியம்பாடி மட்டன் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, நல்ல மணத்துடன் ருசியாகவும் இருக்கும்.
இந்த பிரியாணியை தீபாவளி நாளில் செய்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் பாராட்டைப் பெறலாம். இந்த பிரியாணியின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது தான் தனித்துவமான மணத்திற்கும், சுவைக்கும் காரணம். அதுவே ரோஸ்வாட்டர்.

உங்களுக்கு வாணியம்பாடி மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாணியம்பாடி மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1 லிட்டர்
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 150 மிலி
* நெய் - 1/4 கப்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 7
* ஏலக்காய் - 7
* வெங்காயம் - 4 (நீளவாக்கில் நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 5 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* புதினா - 1/2 கட்டு
* பச்சை மிளகாய் - 8
* ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
சாதம் வேக வைப்பதற்கு...
* தண்ணீர் -
* உப்பு - 3 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* ஊற வைத்த பாசுமதி அரிசி - 1/2 கிலோ
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் 1/2 கிலோ மட்டனை கழுவி சேர்த்து, அத்துடன் 1
லிட்டர் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு அடிகனமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை மட்டும் எடுத்து
சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மட்டன் வேக வைத்த நீரை தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், அரைத்த தக்காளி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி பிரியாணி மசாலாவை சேர்த்து நன்கு
பிரட்டி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி, புதினா மற்றும் முழு பச்சை மிளகாயை
சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கிளறி, மட்டன் வேக
வைத்த நீரை முழுவதுமாக ஊற்றி, மூடி வைத்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பாசுமதி
அரிசியை வேக வைக்க தேவையான அளவு நீரை ஊற்றி, அத்துடன் 3 டீஸ்பூன்
உப்பு, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி, ஊற வைத்த பாசுமதி அரிசியை
சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் அரிசியை பாதியாக வேக வைத்து இறக்கி, நீரை
முழுவதுமாக வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு கொதித்துக் கொண்டிருக்கும் பிரியாணி நீருடன், வேக வைத்த
பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, சமப்படுத்தி விட வேண்டும்.
* பின் அதன் மேல் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டீஸ்பூன் நெய்
சேர்த்து, பாத்திரத்திற்கு அடியில் ஒரு தோசைக்கல்லை வைத்து,
பாத்திரத்தை மூடி, மேலே ஒரு கனமான கல் அல்லது நீர் நிரப்பிய
பாத்திரத்தை வைத்து, உயர் தீயில் 10 நிமிடம் வேக வைத்து, பின் குறைவான
தீயில் வைத்து 10 நிமிடம் தம் போட்டு இறக்க வேண்டும். பின்பு 20
நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், சுவையான வாணியம்பாடி மட்டன்
பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications
