Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
பாசிப்பருப்பும், அரிசி மாவும் இருந்தா.. சுவையான முறுக்கு சுடலாம்.. அது எப்படி-ன்னு பாருங்க..
Diwali Special Moong Dal Murukku Recipe: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் பலவிதமான பலகாரங்களை செய்வதுண்டு. தீபாவளி பலகாரம் என்றாலே முறுக்கு, சீடை, அதிரசம், குலாப் ஜாமூன் போன்றவை தான் நினைவிற்கு வரும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் முறுக்கை விரும்பி சாப்பிடுவார்களா? இந்த தீபாவளிக்கு வீட்டில் முறுக்கு சுட நினைக்கிறீர்களா? அப்படியானால் பாசிப்பருப்பு முறுக்கை சுடுங்கள். இந்த பாசிப்பருப்பு முறுக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது 1/2 மணிநேரத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு முறுக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 2 கப்
* வறுத்த பாசிப்பருப்பு பொடி - 1/2 கப்
* எள்ளு விதை - 1 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி,
சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, வெதுவெதுப்பாக சர்க்கரை
உருகும் வரை சூடேற்றி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு, உப்பு,
எள்ளு விதைகள், நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் கையால் கிளறி, தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அந்த எண்ணெயை முறுக்கு மாவுடன் சேர்த்து
பிசைந்து விட வேண்டும்.
* பிறகு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் உங்களுக்கு எந்த வடிவிலான
முறுக்கு வேண்டுமோ, அதன் அச்சை வைத்து, அதன் பின் முறுக்கு மாவை உள்ளே
வைத்து, ஒரு தட்டில் முறுக்குகளை பிழிந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப் போட்டு
பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு முறுக்கு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications