Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
Dhania Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி தான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தனியா என்று அழைக்கப்படும் மல்லி விதை உள்ளதா? அப்படியானால் அதை வைத்து மல்லி விதை சட்னி செய்யுங்கள். இந்த சட்னி நீங்கள் இதுவரை சாப்பிடாத சுவையில் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி சட்னியை செய்து விட்டால், அதற்குப்பிறகு அடிக்கடி இந்த சட்னியைத்தான் செய்வீர்கள். இந்த சட்னி சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மல்லி விதை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி விதை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- ¼ கப் தனியா
- 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
- ½ இன்ச் இஞ்சி
- 5 பூண்டு பல்
- 10 கறிவேப்பிலைகள்
- நெல்லிக்காய் அளவு புளி
- 2 வர மிளகாய்
- ¼ கப் துருவிய தேங்காய்
- ½ ஸ்பூன் வெல்லம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- இஞ்சியை நன்றாக கழுவித் தோலுரிக்கவும். அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, தனியா, நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- கடைசியாக, துருவிய தேங்காயைச் சேர்க்கவும். சில நிமிடங்களுக்குக் கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
- அனைத்து பொருட்களையும் ஆற விடவும். இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் உப்பு, புளி மற்றும் வெல்லத்தைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அனைத்தையும் கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இது ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான மல்லி விதை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications