Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சப்பாத்தி, பூரிக்கு பன்னீர் இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Dhaba Style Paneer Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் விடுமுறை நாட்களில் காலை வேளையில் சப்பாத்தி அல்லது பூரி செய்வது வழக்கமாக இருந்தால், இந்த வார இறுதியில் வழக்கமாக செய்யும் சப்பாத்தி, பூரிக்கு ஒரு ஸ்பெஷலான சைடு ஷ் செய்ய நினைத்தால், பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு தாபா ஸ்டைலில் மசாலா செய்யுங்கள். இந்த தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* பன்னீர் - 200 கிராம்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1/2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்ச தூள் - 1 சிட்டிகை
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த பன்னீருடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை செய்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்,
சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து கிளறி விட்டு தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் ப்ரை செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, நன்கு 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கரம் மசாலா, கசூரி மெத்தியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications