பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்

Posted By:

Dhaba Style Paneer Bhurji Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசைக்கு அடுத்தப்படியாக அதிகமாக செய்யப்படும் ஒரு உணவென்றால் அது சப்பாத்திதான்? பொதுவாக சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமா அல்லது வெஜ் குருமாதான் செய்வோம். சப்பாத்திக்கு புதிதாக ஏதாவது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் பன்னீரை வைத்து தாபா ஸ்டைலில் புர்ஜி செய்து பாருங்கள்.

Dhaba Style Paneer Bhurji Recipe How to Make at Home in Tamil

எப்போதும் பன்னீரை ஒரே மாதிரியாக செய்து போரடித்துவிட்டதா? அப்படியென்றால் இந்த தாபா ஸ்டைல்பன்னீர் புர்ஜி செய்து பாருங்கள். இந்த தாபா ஸ்டைல் பனீர் புர்ஜி சப்பாத்தி, புரோட்டா மற்றும் தோசை என அனைத்திற்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும். இந்த பன்னீர் புர்ஜி சாப்பிடுவதற்கு முட்டை புர்ஜி போலவே அட்டகாசமாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் எளிதானதாகும். இதுபோல பன்னீரை செய்தால் இனிமே பனீர் வாங்கினாலே இப்படித்தான் செய்வீர்கள்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 200 கிராம் துருவிய பன்னீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
- 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் கடலை மாவு
- ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய தக்காளி
- 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- 1/2 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
- 2 ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
- 2 ஸ்பூன் புதினா இலைகள்

செய்முறை:

- 200 கிராம் பன்னீரை ஒரு பாத்திரத்தில் துருவி தனியாக எடுத்து வையுங்கள்.

- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துச் சில நொடிகள் வதக்க வேண்டும்.

- எண்ணெய்க்கு பதிலாக நெய் அல்லது பட்டரை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

- எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் நன்றாக பழுப்பு நிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

- அனைத்து மசாலாப் பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து, குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். இதை மிதமான தீயில் வதக்குவது அவசியம்; இல்லையெனில் மசாலாப் பொடிகள் கருகிவிடும்.

- அதனுடன் கடலை மாவைச் சேர்த்து, மீண்டும் ஒரு நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும். கடலை மாவு பனீர் புர்ஜிக்கு நல்ல அடர்த்தியையும் சுவையையும் கொடுக்கும்.

- பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- அரை கப் தண்ணீர் ஊற்றி, தக்காளி நன்கு குழைந்து வேகும் வரை 10-15 நிமிடங்கள் சமைக்கவும். கலவை மிகவும் வறண்டு அடிபிடிப்பது போல் இருந்தால், தேவைக்கேற்ப அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

- பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் துருவிய பனீரைச் சேர்க்கவும். மசாலாக்கள் பனீருடன் நன்கு கலந்து ஒரே சீரான கலவையாக மாறும் வகையில் ஒரு நிமிடம் கிளறவும்.

- பின்னர் ப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கிளறி, மேலும் ஒரு நிமிடம் சமைக்கவும். கிரீம் சேர்ப்பது புர்ஜிக்குச் சிறந்த சுவையையும் மென்மையான தன்மையையும் அளிக்கும்.

- இறுதியாக நறுக்கிய புதினா இலைகளைச் சேர்த்து ஒருமுறை கலந்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி ரெடி. இதை சூடான சப்பாத்தி, நாண் அல்லது புல்காவுடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 14, 2026, 13:55 [IST]
Desktop Bottom Promotion