Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: ருசியான... தாவூத் சிக்கன் வறுவல்
Dawood Chicken Varuval : இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அதுவும் இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தாவூத் சிக்கன் வலுவலை செய்யுங்கள்.
இந்த சிக்கன் வறுவல் ஈஸியான செய்முறையைக் கொண்டதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் உங்களுக்கு தாவூத் சிக்கன் வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தாவூத் சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* மல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
வறுவலுக்கு..
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதை, வரமிளகாய் மற்றும் மிளகு
சேர்த்து, நன்கு அரைத்து, பொடியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை நன்கு கழுவிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த சிக்கனில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள்
தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி,
நீர் சேர்க்காமல் சிக்கனை மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
வெண்ணெய் சேர்த்துள்ளதால், அடிபிடிக்காது. ஆனால் அவ்வப்போது கிளறி விட
வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
கிளறி, மீண்டும் மூடி வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி
சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மேலே கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி மேலே தூவி கிளறினால்,
சுவையான தாவூத் சிக்கன் வறுவல் தயார்.
Image Courtesy: taste of asian food



Click it and Unblock the Notifications
