Latest Updates
-
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா?
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Potato Cheese Cutlet Recipe In Tamil: பிள்ளைகள் வீட்டில் இருந்தாலே சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் புதுமையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்கவும் சொல்வார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு கட்லெட் பிடிக்குமா? அப்படியானால் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட்டை செய்து கொடுங்கள். இந்த பக்குவத்தில் சீஸ் கட்லெட் செய்யும் போது பிள்ளைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு...
* பதப்படுத்தப்பட்ட சீஸ் - 1 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1/4 டீஸ்பூன்
கட்லெட்டிற்கு..
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 5 (துருவியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் துருவிய பதப்படுத்தப்பட்ட சீஸ், பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி
மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு,
மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கையில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி,
தட்டையாக தட்டி கிண்ணம் போன்று செய்து, நடுவே சிறிது சீஸ் கலவையை
வைத்து, அப்படியே மூடி உருட்டி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக்
கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும் செய்து ஒரு தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டை சேர்த்து, மிதமான
தீயில் வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
