Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம்
சீத்தாப்பழம் மில்க் ஷேக்
தற்போது சீத்தாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த சீத்தாப்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது சீத்தாப்பழம் சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண நேரிடும். அந்த சீத்தாப்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இந்த மில்க் ஷேக் செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு சீத்தாப்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீத்தாப்பழம் மில்க் ஷேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீத்தாப்பழம் - 1-2 (நன்கு கனிந்தது)
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* குளிர்ந்த பால் - 1 கப்
செய்முறை:
* முதலில் சீத்தாப்பழத்தின் உள்ளே இருக்கும் தசைப்பகுதியை கரண்டியால் எடுத்து, மிக்சர் ஜார்/பிளெண்டரில் போட்டு, 1/4 கப் பால் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு அரைத்து, அதில் உள்ள விதைகளை எடுத்துவிட வேண்டும்.
* பின்னர் அதில் சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது அரைத்ததை ஒரு டம்ளரில் ஊற்றினால், சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
