Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
வெள்ளரிக்காய் வெச்சு சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Cucumber Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெள்ளரிக்காய் உள்ளதா?
அப்படியானால் அந்த வெள்ளரிக்காய் கொண்டு சட்னியை செய்யுங்கள். ஆம், நீங்கள் படித்தது சரி தான். வெள்ளரிக்காய் கொண்டு சட்னியை செய்யலாம். இந்த வெள்ளரிக்காய் சட்னி இட்லியுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோர் வெள்ளரிக்காயை சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு வெள்ளரிக்காய் சட்னி செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெள்ளரிக்காய் சட்னியை செய்வது மிகவும் சுலபம். அதுவும் இந்த சட்னியானது பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு வெள்ளரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் - 1
* கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* வரமிளகாய் - 4-5
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை
வறுக்க வேண்டும்.
* அதன் பின் பூண்டு, வரமிளகாய், புளி சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள், தேங்காய், கொத்தமல்லி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, 3/4 கப் நீரை ஊற்றி
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
வெள்ளரிக்காய் சட்னி தயார்.
Image Courtesy: Tasty Food Key



Click it and Unblock the Notifications
