Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இட்லி, தோசைக்கு சூப்பரான மூன்று நாள் வரை கெட்டுப்போகாத வர கொத்தமல்லி சட்ன ரெசிபி
Coriander Seeds Chutney Recipe in Tamil: வீட்டில் சமைப்பவர்களுக்கு என்ன சமைக்கலாம் என்பது தான் பெரிய தலைவலியாக இருக்கும். எப்படியோ முடிவு செய்து, காலை, மதியம், மற்றும் இரவு சமையல் செய்வார்கள். இப்போது நம் எல்லா வீடுகளிலும் பிரிட்ஜ் இருப்பதால் பெரும்பாலும் இட்லி தோசை தான் பிரதான உணவாகி விட்டது. இதற்கு காரணம் பெண்கள் வேலைக்கு போகும் அவசரத்திலும், வேலை முடிந்து வந்த சோர்விலும் வேறு என்ன சிறப்பாக செய்ய முடியும். ஆனால் இட்லி, தோசை அலுத்துப்போகாமல் இருக்க, தினமும் நாம் விதவிதமான சட்னி சாம்பார் வகைகளும் செய்வோம்.

அதில் கொத்தமல்லி சட்னி பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். கொத்தமல்லி சட்னி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக செய்வார்கள். ஆனால் கொத்தமல்லி விதையை வைத்து இந்த சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இதை கெட்டியாக அரைத்து எடுத்து கொண்டால் சாதத்திற்கும், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்தால் தோசை, இட்லிக்கும் ஏற்ற அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இதை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம், கெட்டு போகாமல் இருக்கும். மேலும் இது பித்தத்தை குறைக்கும் பண்பையும் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு சுவையான வர கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வர கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 5-6 (காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - ½ முடி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 5-6 பல்
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடலை எணணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - ¼ டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- ½ மூடி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து
கொள்ளவும்.
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்து வைத்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணையை சேர்க்கவும்.
- பின் அதில் வர மிளகாயை சேர்த்து நன்றாக வறுத்து தனியே எடுத்துக்
கொள்ளவும்.
- அதே வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் கடலை பருப்பு, உளுந்தம்
பருப்பை சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுக்கவும்.
- பின் அதனுடன் சிறிதளவு புளியை சேர்த்து வறுத்து ஆற விடவும்.
- கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்கு சிவக்கும் படி கருகிவிடாமலும்
வறுக்கவும்.
- பின் அதனுடன் தேங்காய்யை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி
ஆறவைக்கவும்.
- அதே வாணலியில் தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பூண்டை
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- தோசை அல்லது இட்லிக்கு செய்தால், வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து
வதக்கி ஆற வைக்கவும். சாதத்திற்கு செய்தால் தக்காளியை
தவிர்க்கவும்.
- மிக்ஸி ஜாரில் வதக்கி ஆற வைத்த பொருட்களுடன் தேவையான அளவு உப்பு
சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பின் வாணலியில் சிறிதளவு கடலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு
சேர்த்து பொரிய விடவும்.
அதனுடன் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கொள்ளவும்.



Click it and Unblock the Notifications