Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி
Coriander Peanut Chutney Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
தினமும் ஒரே மாதரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் உங்கள் வீட்டில் வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி உள்ளதா? அப்படியென்றால் அவற்றைக் கொண்டு கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.

இந்த கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சற்று வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த சட்னியை செய்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 இட்லியை சாப்பிடுவார்கள். இந்த சட்னி இட்லிக்கு மட்டுமின்றி, தோசை, உப்புமா, பொங்கல் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு கொத்தமல்லி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/2 கப்
* கொத்தமல்லி - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* புளி - 1 இன்ச் துண்டு
* வெல்லம் - சிறிது
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 1
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப்
போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை மற்றும் புளியை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கொத்தமல்லியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, அடுப்பை
அணைத்துவிட்டு, தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: blendwithspices



Click it and Unblock the Notifications
