Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
வீட்டுல கத்திரிக்காய் இருந்தா.. ஒருடைம் இந்த கோயம்புத்தூர் ஸ்டைலில் சட்னி செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்..
Coimbatore Style Brinjal Chutney Recipe In Tamil: காலையில் செய்யும் இட்லி, தோசைக்கு எப்போதும் வெங்காயம், தக்காளி, தேங்காய் வெச்சு சட்னி செய்து போரடிச்சுடுச்சா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு அட்டகாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் 10 நிமிடத்தில் ஒரு சூப்பரான சட்னியை செய்யலாம். இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கத்திரிக்காய் சாப்பிட மறுக்கும் உங்கள் பிள்ளைகள் மற்றும் வீட்டில் உள்ளோருக்கு இப்படி கத்திரிக்காய் வைத்து சட்னி செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் கோயம்புத்தூர் ஸ்டைலில் இந்த சட்னியை செய்து பாருங்கள், சுவை இன்னும் அள்ளும்.

உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 5
* தக்காளி - 3
* சிறிய உருளைக்கிழங்கு - 1
* சின்ன வெங்காயம் - 6
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 3
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி,
உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், சிறு
புளி துண்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில்
வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 3 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அவற்றை ஒரு குழி பாத்திரத்தில்
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கோயம்புத்தூர் ஸ்டைல் கத்திரிக்காய் சட்னி தயார்.
Image Courtesy: Simple and Yummy Recipes



Click it and Unblock the Notifications











