Just In
- 15 hrs ago
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- 19 hrs ago
வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..
- 20 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 1 day ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- News
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மொறுமொறுப்பான... தேங்காய் தட்டை
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அட்டகாசமான மற்றும் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், தேங்காய் தட்டை செய்து கொடுங்கள். இது மாலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது சாப்பிட அட்டகாசமாக இருக்கும் ஒரு ருசியான ஸ்நாக்ஸ். இந்த தட்டை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வண்ணம் அற்புதமாக இருக்கும்.
கீழே தேங்காய் தட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 2 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* வரமிளகாய் - 2
* மல்லி விதைகள் - 2 டீபூன்
* ஓமம் - 1/4 டீபூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதைகள், ஓமம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
* பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டையை தட்டையாக தட்டி, எண்ணெய் போட்டு பொன்னிறிமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், தேங்காய் தட்டை தயார்.
Image Courtesy: archanaskitchen