Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
தேங்காய் சட்னியை ஒருடைம் இந்த மாதிரி அரைங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Coconut Peanut Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பதே பெரிய வேலையாக உள்ளதா? தினமும் ஒரே மாதிரியான சட்னியை சுவைத்து போரத்துவிட்டதா? அதுவும் தேங்காய் சட்னி என்றால் வீட்டில் உள்ளோர் தலைதெறிக்க ஓடுவார்களா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த மாதிரி ட்ரை செய்யுங்கள். இப்படி சட்னியை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு தேங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கெள்ள வேண்டுமா? கீழே தேங்காய் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செற்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 50 கிராம்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* புளி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி
* பெரிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், பாதி பெரிய வெங்காயத்தை மட்டும்
எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து, அந்த சூட்டில் நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
வரமிளகாய் மற்றும் பாதி பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய்
வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
