Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
1 கப் தேங்காயும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா போதும்.. சூப்பரான ஸ்வீட்டை ஈவ்னிங் டைம்-ல செய்யலாம்...
Coconut Milk Halwa Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் ஸ்வீட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் ஏதாவது ஸ்வீட் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்வீட்டை தான் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பீர்களா? உங்கள் வீட்டில் தேங்காயும், கோதுமை மாவும் உள்ளதா? அப்படியானால் அட்டகாசமான சுவையில் ஒரு அல்வாவை செய்யுங்கள்.
இந்த தேங்காய் பால் அல்வா மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஏனெனில் இதில் சர்க்கரை பயன்படுத்தப்படவில்லை. மேலும். இந்த ஸ்வீட்டில் தேங்காய் பால் சுவை இருப்பதால், குழந்தைகள் மீண்டும் மீண்டும் செய்து கொடுக்குமாறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தேங்காய் பால் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
வெல்லத்தை கரைப்பதற்கு...
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
அல்வாவிற்கு..
* நெய் - 1 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த தேங்காயில் 2 கப் நீரை ஊற்றி, வடிகட்டி சற்று
கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, 1/4 கப் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கோதுமை மாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வடிகட்டி ஊற்றி
குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, கட்டிகளின்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* கட்டிகள் நீங்கி, நன்கு அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட
வேண்டும். இப்படி கிளறும் போது ஸ்படுலாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் கிளறுவதற்கு இன்னும் ஈஸியாக இருக்கும்.
* குறைந்தது 10 நிமிடம் வரை நன்கு கிளறி விட வேண்டும்.எண்ணெய் நன்கு
பிரிந்து வருவதைக் கண்டால், சரியான பதத்திற்கு வந்துவிட்டது என்று
அர்த்தம். அதன் பின் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு சில்வர் கிண்ணத்தில்
போட்டு பரப்பி விட வேண்டும்.
* அதன் பின் அதை 1/2 மணிநேரம் அப்படியே குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான தேங்காய் பால்
அல்வா தயார்.
Image Courtesy: cooking and tips cafe



Click it and Unblock the Notifications
