Latest Updates
-
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம்
சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை கிரேவி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Coconut Milk Gravy For Chapathi: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் காய்கறி எதுவும் இல்லையா? வீட்டில் தேங்காயும், வெங்காயமும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் பால் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பால் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 கப் (நீர் போன்றது)+ 1 கப் (கெட்டியானது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், சோம்பு, வரமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 1 கப்
நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக
வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து கிளறி, கடலை மாவை 1/2 கப் நீரில்
கட்டிகளின்றி கரைத்து அதையும் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, கொதிக்க விடாமல்,
கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான தேங்காய் பால் கிரேவி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications