Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஒருடைம் தேங்காய் சட்னியுடன் இந்த 1 பொருளை சேர்த்து அரைச்சுப் பாருங்க.. டேஸ்ட் இன்னும் வேற லெவல்-ல இருக்கும்...
Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களானால், நிச்சயம் தேங்காய் சட்னியையும் அடிக்கடி செய்வீர்கள். அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்கள் என்றால், அடுத்தமுறை தேங்காய் சட்னியை வித்தியாசமாக ட்ரை செய்யுங்கள்.
பொதுவாக தேங்காய் சட்னிக்கு பச்சை மிளகாயைத் தான் சேர்த்து செய்வார்கள். ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாய் சேர்த்து செய்யும் போது, சட்னியின் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். அதுவும் சட்னியை தாளிப்பதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்தினால், ருசி அள்ளும். இப்படி சட்னியை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வரமிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டும். கீழே தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* வரமிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - மிகச்சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காயை சேர்த்து,
அததுடன் வரமிளகாய், பாதி பெரிய வெங்காயம், பூண்டு 4 பல் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து, மிகச்சிறிய
அளவில் புளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, இட்லிக்கு
என்றால், சற்று அதிகமாக நீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதுவே
தோசைக்கு என்றால் ஓரளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்
தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications