Latest Updates
-
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்..
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வேகவைச்சு சட்னி அரைங்க... இட்லி, தோசையோட சாப்பிட தாறுமாறா இருக்கும்...!
Chow Chow Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போன்றவை சரியான காம்பினேஷனாக இருக்கும். நீங்கள் சட்னி தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமான சட்னி செய்யாமல் புதிதாக ஏதாவது சட்னி செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் ஒரு சௌ சௌ இருந்தால் போதும், அந்த காயை வைத்து ஒரு அட்டகாசமான சட்னியை செஞ்சு பாருங்க. அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இந்த ஸ்டைலில் சட்னியை செய்யுங்கள். இப்படி சௌ சௌ சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். இது சுவையானது மட்டுமல்ல இது ஒரு நீர் காயாக இருப்பதால் ஆரோக்கியமானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த சட்னியை அவசியம் சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 சௌ சௌ
- 2 தக்காளி
- 3 பூண்டு பல்
- 3 பச்சை மிளகாய்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை ஸ்பூன் சாம்பார் தூள்
- ஒரு சிறிய துண்டு புளி
- கால் கப் தண்ணீர்
-- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் கடுகு
- கால் ஸ்பூன் சீரகம்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- சௌ சௌவை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரை எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய சௌ சௌ, நறுக்கிய தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறிது தண்ணீர் சேர்த்து விசில் போட்டு மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- அழுத்தம் தணிந்த பிறகு குக்கரைத் திறக்கவும்.
- ஒரு பருப்பு மத்தை வைத்து குக்கரில் உள்ளவற்றை நன்றாக மசித்து விடவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் பெருங்காயம் சேர்த்து கிளறவும். உடனடியாக அதை
சட்னியில் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சௌ சௌ சட்னி ரெடி. இது இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
