Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
இந்த 6 பொருள் இருந்தா போதும்... ஈஸியா சாக்லேட் மக் கேக் செஞ்சுடலாம்...
Chocolate Mug Cake Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஓவன் உள்ளதா? உங்கள் குழந்தைகள் கேக்கை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் கேக் எதையும் முயற்சித்தது இல்லையா?
அப்படியானால் வேகமாகவும், அதே வேளையில் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான சாக்லேட் மக் கேக் செய்யுங்கள். இந்த கேக் செய்வதற்கு 6 பொருட்கள் இருந்தால் போதும். சீக்கிரம் செய்துவிடலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சாக்லேட் மக் கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாக்லேட் மக் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ட்ரை மிக்ஸ்...
* கோதுமை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* பனங்கற்கண்டு - 4 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 2 டேபின் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெட் மிக்ஸ்...
* பால் - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, பனங்கற்கண்டு, கொக்கோ பவுடர்
ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கட்டிகளின்றி நன்கு
க்ரீமியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஓவனில் வைக்க ஏற்ற ஒரு மக்/கப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தயாரித்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ப்ரீஹீட் செய்யப்பட்ட ஓவனில் இந்த மக்கை வைத்து 180 டிகிரி
செல்சியஸில் வைத்து 20 நிமிடம் பேக்கிங் செய்ய வேண்டும். கேக்
தயாராகிவிட்டதா என்பதை, ஒரு டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும்
போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் ஓவனில் சில நிமிடங்கள்
பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் மக் கேக்
தயார்.
குறிப்பு:
* இந்த கேக் செய்வதற்கு கோதுமை மாவு மற்றும் பனங்கற்கண்டு
பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் அதற்கு பதிலாக மைதா மற்றும்
சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
* இங்கு கூறப்பட்டுள்ள நேரம் ஓவனுக்கு உரியது. மைக்ரோவேவ்-க்கு
அல்ல.
* உங்களுக்கு கேக் இனிப்பாக வேண்டுமானால், கூடுதலாக இனிப்பை
சேர்த்துக் கொள்ளலாம்.
* விருப்பமிருந்தால், அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸை
சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
