Latest Updates
-
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்! -
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா? -
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் முட்டை ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது-ன்னு தெரியுமா?
Chinese Restaurant Style Egg Fried Rice Recipe: இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ஃப்ரைடு ரைஸை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் இந்த ஃப்ரைடு ரைஸை எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவீர்களா?
அப்படியானால் இன்று அதை கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அதுவும் உங்களுக்கு முட்டை ஃப்ரைடு ரைஸ் பிடிக்குமானால், அதை சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இதற்கு பாசுமதி அரிசி, முட்டை, சிறிது காய்கறிகள் இருந்தால் போதும்.

உங்களுக்கு சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் முட்டை ஃப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டை ஃப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 கப்
* முட்டை - 4
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட
வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, குறைவான
தீயில் வைத்து, 6-8 நிமிடம் அரிசியை வேக வைக்க வேண்டும்.
* 8 நிமிடம் கழித்து, சாதத்தை எடுத்து நசுக்கி பார்க்கும் போது, அது
முக்கால் பதம் வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் உள்ள
அதிகப்படியான நீரை வடிகட்டிவிட்டு, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு
பொடிமாஸ் போன்று கிளறி, ஒரு பௌலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ், பீன்ஸ் சேர்த்து உயர்
தீயில் வைத்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து சுவைக்கேற்ப உப்பு, வினிகர், சோயா சாஸ், மிளகுத் தூள்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி,
பின் முட்டை பொடிமாஸை சேர்த்து நன்கு உயர் தீயில் வைத்து 2 நிமிடம்
கிளறி இறக்கினால், சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











