Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும்
Chickpeas Potato Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது சப்பாத்தி அல்லது பூரிதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும். ஆரோக்கியமான சைடிஷ் என்று வரும்போது கொண்டைக்கடலையை வைத்து செய்வது நல்ல தேர்வாக இருக்கும். கொண்டைக்கடலையை உருளைக்கிழங்குடன் சேர்த்து நார்த் இந்தியன் ஸ்டைலில் மட்டன் குருமா போல சூப்பரான சைடிஷை செய்யலாம்.
உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் வேக வைத்த கொண்டக்கடலை
- 1 பெரிய வேக வைத்த உருளைக்கிழங்கு
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 கப் நறுக்கிய தக்காளி
- 2 ஸ்பூன் புதினா
- 2 ஸ்பூன் கொத்தமல்லி
- 1/2 கப் தயிர்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் உப்பு
-1 கப் சுண்டல் வேகவைத்த தண்ணீர்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 10 முந்திரி பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 பிரியாணி இலை
- 1 அன்னாசி பூ
- 1 ஜாதிக்காய் இழை
- ½ ஸ்பூன் சீரகம்
- 3 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 2 இன்ச் இலவங்கப்பட்டை
செய்முறை:
- முதலில் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மசாலா பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும். அவை பொரியத் தொடங்கியதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை சமைக்கவும்.
- உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் புதினா இலைகளைச் சேர்த்து, மணம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தயிர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை சுண்ட விடவும். அதன்பின் வேகவைத்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, சுண்டல் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.
- இதை மிதமான தீயில் மெதுவாக கொதிக்க விடவும். மூடி வைத்து, 6 முதல் 8 நிமிடங்கள் வரை, கெட்டியாகி மணம் வரும் வரை கொதிக்க விடவும்.
- கொண்டைக்கடலையும் உருளைக்கிழங்கும் நன்கு வெந்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்தால் சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
