Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
Mars In Cancer 2026: நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அந்த வகையில் தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி வரை இருப்பார். கடக ராசியின் அதிபதி சந்திரன்.

ஜோதிட நம்பிக்கைகளின்படி, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டின் தன்மையும் தாக்கமும் தனித்துவமானதாக கருதப்படுகின்றன. எனவே இந்த ராசிக்கு செவ்வாய் செல்வது சில ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வரக்கூடும். அதுவும் சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறக்கூடும். மேலும் அவசர முடிவுகள் சிக்கல்களை அதிகரிக்கும்.
மொத்தத்தில் எந்த ஒரு காரியங்களையும் செய்வதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பண விஷயத்தில் சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது கடக ராசியில் இருக்கும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறுக்குவழிகளைப் பின்பற்றுவதையோ அல்லது விதிகளை மீறுவதையோ தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய பிரச்சனையில் சிக்கி திணறுவீர்கள். திருமணத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் நன்மை தீமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சிரமங்களால் வேலையை மாற்ற நினைக்கலாம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் போட்டி அதிகரிக்கும். நிதி விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காதலித்து வந்தால், சிறு விஷயங்களால் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற்றாலும், செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலையை சமநிலையில் பராமரிக்க செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்ற வழக்குகளால் சற்று அதிகமாக அலைய வேண்டியிருக்கும். எந்தவொரு செயலிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். குறுக்கு வழியில் எதையும் பெற முயற்சிக்காதீர்கள். எந்த வேலையையும் திட்டமிட்ட முறையில் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



